ஒரு வெங்காயத்தின் கதை
ஒரு ஊர்ல.. ஒரு வெங்காயம், தக்காளி, ice cream அப்படின்னு மூன்று நண்பர்கள் இருந்தாங்களாம்.
ஒரு நாள் மூவரும் கடற்கரைக்குப் போனாங்களாம். அப்ப சொல்ல சொல்லக் கேக்காம ice cream, தண்ணீருக்குப் போய் கரைஞ்சிப் போச்சாம்.
தக்காளியும் வெங்காயமும் அங்கேயே புரண்டு புரண்டு அழுதாங்களாம். வீட்டுக்கு வரும் வழியில் லாரி மோதி தக்காளி நசுங்கிப் போச்சாம்.
உடனே வெங்காயம் அழுதுக்கிட்டே கடவுள் கிட்ட வேண்டிக்கிச்சாம். " ice cream செத்தப்ப நானும் தக்காளியும் அழுதோம், இப்போ தக்காளி செத்தப்ப நான் அழுதேன்.. ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா எனக்குன்னு அழ யாரு இருக்கா? ன்னு கேட்டுச்சாம்.
அதற்கு கடவுள், "சரி இனிமே நீ சாகும் போது பக்கத்துல இருக்குற எல்லாருமே அழுவாங்க" ன்னு சொன்னாராம். அதனால் தான் வெங்காயம் நறுக்கும்போதெல்லாம் நாம் அழறோம்:))) --~--~---------~--~----~- "தமிழ் பிரவாகம்" thanks to viji.
Posted by லொள்ளு சபா at 19:34 19 comments Links to this post
Labels: story
Tuesday, 21 April 2009
Saturday, March 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.